Advertisements

ஊழலற்ற நல்லாட்சியை ஏற்படுத்துவதே இலக்கு – ஏ.எம்.எம்.நௌஷாத் (சம்மாந்துறை பிரதேச சபை)

(சம்மாந்துறை மேலதிக நிருபர்)

சம்மாந்துறை பிரதேச சபையின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்தில் ஊழலற்ற, நல்லாட்சியினை ஏற்படுத்துவதோடு, மக்களுக்கு சிறந்த சேவைகளையும் தடைப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதே எனது பிரதான இலக்காகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 15114 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய தலைமை வேட்பாளருமான ஏ. எம். எம். நௌஷாத் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தல் குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சம்மாந்துறை பிரதேச சபைக்கு தேசியக் கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாத்திரமன்றி, சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் கூட மக்கள் ஒவ்வொருவரையும் வீடு தேடி வந்து சந்தித்தபோதும் மக்கள் உண்மையை உணர்ந்து எனக்கும் எனது சக வேட்பாளர்களுக்கும் வாக்களித்து சபையை வெற்றிபெறச் செய்துள்ளார்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கெள்கின்றேன்.

சம்மாந்துறையில் ‘நல்லாட்சி’ என்ற கனவுடனே இப்பணியில் இறங்கியுள்ளேன். வரலாற்றிலே மஜ்லிஸ் அஷ்ஷுறா, ஸக்காத் பரிபாலனம், ஹிப்ழு மத்ரஸா என்று நாமே மாற்றத்தைத் தொடங்கி வைத்த பெருமை எமக்குண்டு. அவ்வாறே சம்மாந்துறை பிரதேச சபை மூலம் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்த பெருமையும் சம்மாந்துறைக்கு ஏற்பட வேண்டும்.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் பொழுது போக்கிடம் முக்கியமானதாகும். அவ்வாறான இயற்கையை அனுபவிக்கத்தக்கதான பொழுது போக்கிடம், வடிகான் பொறிமுறை, நவீன கசாப்புக் கடைகள், நவீன சந்தை வசதிகள், இலத்திரனியல் நூலக வசதிகள், கழிவகற்றல் பொறிமுறைகள் என்பனவற்றினை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.

சம்மாந்துறையை ‘நவீன நகரம்’ என்ற அத்திவாரத்துக்கு ஒரு பிரதான வரைபடம் வேண்டும். அது சம்மாந்துறை நகரத்தையும் கிராமங்களையும் இணைத்தவாறும் பிரதேச முஸ்லிம், தமிழ் மக்களை இணைத்தவாறும் பிரதேசத்தின் வளங்களையும் ஆற்றலையும் இணைத்தவாறு இந்த வரைபடம் அமைய திட்டமிடவுள்ளோம்.

பள்ளிவாசல்கள், கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் என்பன சமூகத்தில் மைய நிலையங்களாக தொழிற்பட வேண்டும். மையவாடிகள் மனிதன் சிந்திப்பதற்கும் சென்று வருவதற்குமான அழகிய நிலையங்களாக மாற வேண்டும்.

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் எந்த வேட்பாளரும் தோல்வியடையவில்லை. எந்த வேட்பாளரும் வெற்றியடையவும் இல்லை. போலியும், பொய்மையும் ஊழலும் அசத்தியமும் தோற்று உண்மையும் நேர்மையும் சத்தியமும் வென்றிருக்கின்றது. இந்த மகத்தான வெற்றிக்கு சொந்தமானவர்கள் சம்மாந்துறை மக்களாகும்.

அரசியலில் ஈடுபடுகின்ற பலர் அவ்வரசியலாலே வாழ வேண்டுமென எண்ணுகின்றார்கள். ஆனால் நான் அரசியலை நம்பி வாழ்பவனல்ல. அப்படி வாழ வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் எமது மக்களுக்கு இயலுமானதை செய்து அதன் மூலமும் இறைவனின் பொருத்தத்தைப் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

அரசியலில் சொல்லுகின்றபடி செய்து காட்ட வேண்டும். செய்வதையே சொல்ல வேண்டும் என்ற கோட்பாட்டுடன் ‘நல்லாட்சி’ ஒன்றை கிராம மட்டத்திலிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இப்பிரதேச சபைத் தேர்தலில் ஜனாதிபதியின் வேண்டுதலின் பேரில் களமிறங்கினேன்.

எனவே, பிரதேச சபைகள் கொந்தராத்துக்களின் குடியிருப்பும் அல்ல, அதன் உறுப்பினர்கள் அதன் பங்குதாரர்களும் அல்ல என்ற புதிய பாதையில் சம்மாந்துறையை நவீன நகரமாக்கும் கோஷத்துடன் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

Source: Vidivelli

சம்மாந்துறை பிரதேச வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்திற்காக 2009 ஆண்டுக்கு இலங்கை சமுர்த்தி அதிகார சபையால் 24 இலட்சத்து எழுபது ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.பீ.எம். ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் தொழில் முயற்சிகளுக்காக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 143 திட்டங்களுக்கு இந்நிதி பங்கிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கைத்தொழில், மிருக வளர்ப்பு, மீன்பிடி, சந்தை வாய்ப்பு சேவை போன்ற மக்களின் பஜீவனோபாய நடவடிக்கைக்கு வழங்கப்படும்.

நிதியின் 50 வீதம் மானியமாகவும் ஏனைய 50 வீதம் மீளச் செலுத்தி சுழற்சி நிதியத்தினூடாக ஏனைய நபர்களுக்கும் தொழில் முயற்சிக்கு உதவும் ஒரு சிறந்த நடைமுறையாக இலங்கை சமுர்த்தி அதிகார சபை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடக்கூடிய விடயமெனவும் ஹுஸைன் தெரிவித்தார்

Source; thinakaran

18_07_2009_THINAKKURAL ARTICLE

18_07_2009_THINAKKURAL

17_07_2009_008_THINAKKURAL

17_07_2009_020_VIRAKESARI

சம்மாந்துறையை சேர்ந்த “லுச்சாட ஆதம் கனி ” என அழைக்கப்படும்  அல் ஹாஜ்
ஆதம்பாவா அவர்கள் வியாழக் கிழமை சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜிஊன்.
அன்னார் ஹாஜியானி ஆஸுரா உம்மா அவர்களின் அன்பு  கணவரும்
ஜெசீமா ,அரபாத்,நஜீமா(மதீனா),ஹசீனா (லண்டன்),நிஸ்தார் (கட்டார்)   ,நிஃப்ராத்,நிஸ்ரியா, அஸ்ஸாத், அரபாத்,ஆகியோரின் தகப்பனாரும் ,
சின்ன லெப்பே (சம்மாந்துறை ),ஹகீம் (மதீனா) மற்றும் ரியாத் இஸ்மாயில் (லண்டன்),பரீனா  ஆகியோரின் மாமனாரும் ,மு அஸ்ஸாம் ( ஓமான்) ,ராஜிதா ஆகியோரின் மாமாவும் ஆவர்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் வெள்ளி கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் சவூதி அரேபியாயாவில் உள்ள ரியாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படும் எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழை களை பொறுத்து” ஜன்னத்துல் பிர்தௌஸ்” எனும் சொர்க்கத்தில் நுழைய செய்வானாக
சம்மாந்துறை.COM அன்னாரின் குடும் உறவினர்களுக்கு ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது

சம்மாந்துறையை சேர்ந்த “லுச்சாட ஆதம் கனி ” என அழைக்கப்படும்  அல் ஹாஜ்  ஆதம்பாவா அவர்கள் வியாழக் கிழமை சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜிஊன்.

ATHAMBAWA

அன்னார் ஹாஜியானி ஆஸுரா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

ஜெசீமா ,அரபாத்,நஜீமா(மதீனா),ஹசீனா (லண்டன்),நிஸ்தார் (கட்டார்)   ,நிஃப்ராத்,நிஸ்ரியா, அஸ்ஸாத், அரபாத்,ஆகியோரின் தகப்பனாரும் ,

சின்ன லெப்பே (சம்மாந்துறை ),ஹகீம் (மதீனா) மற்றும் ரியாத் இஸ்மாயில் (லண்டன்),பரீனா  ஆகியோரின் மாமனாரும் ,மு அஸ்ஸாம் ( ஓமான்) ,ராஜிதா ஆகியோரின் மாமாவும் ஆவர்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் வெள்ளி கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் சவூதி அரேபியாயாவில் உள்ள ரியாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படும் எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழை களை பொறுத்து” ஜன்னத்துல் பிர்தௌஸ்” எனும் சொர்க்கத்தில் நுழைய செய்வானாக

சம்மாந்துறை.COM அன்னாரின் குடும் உறவினர்களுக்கு ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது

Advertisements